chicken Gravy hOw DO make -செட்டிநாடு சிக்கன் கிரேவி எப்படி செய்வது?
10 நிமிடத்தில் அருமையான செட்டிநாடு சிக்கன் கிரேவி எப்படி செய்வது? சமையல் தெரியாதவங்க கூட சுலபமா இப்படி செய்யலாமே! By Raji JUL 5, 2022, 08:05PM IST சிக்கன் பிரியர்களுக்கு அதை சமைப்பதில் இருக்கும் சிரமங்கள் ஏராளம்! ஆனால் பொதுவாக பார்த்து பார்த்து பக்குவமாக மசாலாக்களை அரைத்து செய்யும் சிக்கன் கிரேவி அவரவர் விருப்பத்திற்கு ஏற்ப செய்யப்படுவது வழக்கம். சமையல் தெரியாதவர்கள் கூட ரொம்பவே சுலபமாக விரும்பி செய்யக்கூடிய இந்த சிக்கன் கிரேவி செய்வதற்கு பத்து நிமிடம் கூட ஆகாது! ரொம்ப ரொம்ப நேரம் குறைவாக செய்யக்கூடிய இந்த அருமையான சிக்கன் கிரேவி எப்படி செய்யலாம்? என்பதை தான் இந்த பதிவின் மூலம் இனி பார்க்க இருக்கிறோம் சிக்கன் கிரேவி செய்ய தேவையான பொருட்கள்: சிக்கன் – அரை கிலோ, பெரிய வெங்காயம் – இரண்டு, சீரகத்தூள், மிளகாய் தூள், மல்லித்தூள், கரம் மசாலாத்தூள் ஆகியவை – தலா அரை தேக்கரண்டி, மிளகுத்தூள் – ஒரு டீஸ்பூன், கஸ்தூரி மேத்தி – ஒரு டீஸ்பூன், இஞ்சி பூண்டு விழுது – ஒரு டீஸ்பூன், எண்ணெய் – ஒரு டேபிள் ஸ்பூன், வெண்ணெய் – ஒரு டேபிள் ஸ்பூன், நறுக்கிய மல்லித்தழை – சிறிதளவு, உப்ப...