chicken Gravy hOw DO make -செட்டிநாடு சிக்கன் கிரேவி எப்படி செய்வது?

 10 நிமிடத்தில் அருமையான செட்டிநாடு  சிக்கன்  கிரேவி எப்படி செய்வது? சமையல் தெரியாதவங்க கூட சுலபமா இப்படி செய்யலாமே! By Raji JUL 5, 2022, 08:05PM IST சிக்கன் பிரியர்களுக்கு அதை சமைப்பதில் இருக்கும் சிரமங்கள் ஏராளம்! ஆனால் பொதுவாக பார்த்து பார்த்து பக்குவமாக மசாலாக்களை அரைத்து செய்யும் சிக்கன் கிரேவி அவரவர் விருப்பத்திற்கு ஏற்ப செய்யப்படுவது வழக்கம். சமையல் தெரியாதவர்கள் கூட ரொம்பவே சுலபமாக விரும்பி செய்யக்கூடிய இந்த சிக்கன் கிரேவி செய்வதற்கு பத்து நிமிடம் கூட ஆகாது! ரொம்ப ரொம்ப நேரம் குறைவாக செய்யக்கூடிய இந்த அருமையான சிக்கன் கிரேவி எப்படி செய்யலாம்? என்பதை தான் இந்த பதிவின் மூலம் இனி பார்க்க இருக்கிறோம் சிக்கன் கிரேவி செய்ய தேவையான பொருட்கள்: சிக்கன் – அரை கிலோ, பெரிய வெங்காயம் – இரண்டு, சீரகத்தூள், மிளகாய் தூள், மல்லித்தூள், கரம் மசாலாத்தூள் ஆகியவை – தலா அரை தேக்கரண்டி, மிளகுத்தூள் – ஒரு டீஸ்பூன், கஸ்தூரி மேத்தி – ஒரு டீஸ்பூன், இஞ்சி பூண்டு விழுது – ஒரு டீஸ்பூன், எண்ணெய் – ஒரு டேபிள் ஸ்பூன், வெண்ணெய் – ஒரு டேபிள் ஸ்பூன், நறுக்கிய மல்லித்தழை – சிறிதளவு, உப்பு – தேவையான அளவு. - Advertisement - சிக்கன் கிரேவி செய்முறை விளக்கம்: ரொம்பவே சுலபமாக செய்யக்கூடிய இந்த சிக்கன் கிரேவிக்கு அரை கிலோ அளவிற்கு சிக்கன் தேவை. கோழிக்கறியை நன்கு கழுவி சுத்தம் செய்து தண்ணீர் இல்லாமல் வடிகட்டி ஒரு வாணலியில் எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். பின்னர் இதனுடன் ரெண்டு பெரிய வெங்காயத்தை எடுத்து தோலை நீக்கிவிட்டு மெல்லியதாக நீளவாக்கில் நறுக்கி உதிர்த்து சேர்த்துக் கொள்ளுங்கள். சிக்கன் மற்றும் வெங்காயத்துடன் தேவையான மசாலா பொருட்களை இப்போது ஒவ்வொன்றாக சேர்க்க வேண்டும். மல்லித்தூள், கரம் மசாலாத்தூள், மிளகாய்த்தூள், சீரகத்தூள், மிளகுத்தூள் ஆகியவற்றை சேர்த்து நன்கு கலந்து விடுங்கள். இதனுடன் கஸ்தூரி மேத்தி சேர்த்துக் கொள்ளலாம். கஸ்தூரி மேத்தி எனப்படுவது வெந்தய கீரையை காய வைத்து கிடைக்கப்படும் பவுடராகும். இது ஆப்ஷனல் தான்! உங்களிடம் இருந்தால் சேர்த்துக் கொள்ளுங்கள். இது டிபார்ட்மெண்ட் ஸ்டோர்களில் கிடைக்கும். - Advertisement - சுவையைக் கூட்ட இஞ்சி பூண்டு விழுது சேர்த்துக் கொள்ளுங்கள். பின்னர் தேவையான அளவிற்கு உப்பு மற்றும் பொடிப்பொடியாக நறுக்கிய மல்லித்தழை ஆகியவற்றை சேர்த்து நன்கு கலந்து விட்டுக் கொள்ளுங்கள். இப்போது அடுப்பை பற்ற வைத்து வாணலியை தூக்கி வையுங்கள். ஒரு நிமிடம் நன்கு வதக்கி விட்டு பின்னர் எண்ணெய் மற்றும் வெண்ணை ஆகியவற்றை சேர்த்து பிரட்டி விடுங்கள். பின்னர் மூடி வைத்தால் பத்து நிமிடத்தில் சுவையான சிக்கன் கிரேவி ரெடி ஆகிவிடும். கோழிக்கறியை மூடி வைத்து சமைக்கும் பொழுது அதிலேயே தண்ணீர் விடும் எனவே தண்ணீர் கூடுதலாக நாம் சேர்க்க வேண்டிய அவசியம் இல்லை. இடையிடையே நீங்கள் திறந்து கிண்டி விட்டுக் கொண்டே இருக்க வேண்டும். இல்லை என்றால் அடி பிடித்து விட வாய்ப்புகள் உண்டு. சிக்கன் நன்கு வெந்து சுருள வதங்கி வரும் பொழுது மீண்டும் நறுக்கிய மல்லி தழையை கொஞ்சம் போல் சேர்த்து ஒரு பிரட்டு பிரட்டி இறக்கினால் சுவையான சிக்கன் கிரேவி ரொம்ப சுலபமாக ரெடி ஆகி இருக்கும். இதே மாதிரி நீங்களும் பாரம்பரிய செட்டிநாடு சிக்கன் கிரேவி தயாரித்து அசத்துங்கள்.



Comments

Popular posts from this blog

Matton gravy How do make -மட்டன் கிரேவி செய்முறை

world best Tourist place